சனி, 29 நவம்பர், 2008

ஸாராவின் புன்னகை ( Children of Heaven)


இமானும் ஸாராவும் அண்ணன் தங்கை. அவர்களின் அப்பா கார்பெட் நெய்யும் தொழில் செய்து வந்தார். ஒரு அறை கொண்ட வீட்டில் அவர் ஒரு பக்கம் கார்பெட் நெய்யும் பட்டறை வைத்து வேலை பார்த்து வந்தார்.


அவரது வருமானம் அதிகம் இல்ல ஆனாலும் ஸாராவும் இமானும் நல்ல பணக்கார ஸ்கூல்ல படிச்சாங்க. ரெண்டு பேரும் தினமும் ஒன்னா ஸ்கூலுக்கு போவாங்க. அத பாக்க ரொம்ப அழகா இருக்கும். ஸாரா இமான் விரல பிடிச்சுகிட்டு ஸ்கூலுக்கு போகும். தினமும் ஒரு கதை பேசிட்டு போவாங்க. அய்யோ எவ்ளோ பெரிய வானம், ஏன் இந்த வானம் நீல கலர்ல இருக்கு, ஏன் இவ்ளோ மணல் இங்க ஏன் போட்டு இருகங்கனு ஸாரா எப்போதும் ஏதோ கேட்டுட்டே இருக்கும். அதுக்கு இமான் ம்ம் ஒ சரின்னு ஏதோ பதில் சொல்லிட்டு வருவான். சில நேரம் ஸாராவ தூக்கிட்டு நடப்பான், சில நேரம் நடக்க வைச்சு கூட்டிட்டு போவான். ஆனா எப்போவும் ஸாரா இமான் விரல விட்டதே இல்ல. சில நேரம் தூங்கும் போது கூட விரல பிடிச்சுகிட்டே தூங்கும். ஸாரா இமான விட்டு பிரிஞ்சதே இல்ல.

ஆனா இமான் எங்கயும் விளையாட போகும் போது ஸாராவ ஏமாத்திட்டு விளையாட போவான். ஆனா பல நேரம் ஸாராவ கூட்டிட்டு தான் விளையாட போக வேண்டி இருக்கும். ஆனா நாளைலருந்து இமானோட 7th classலருந்து வேற இடத்துக்கு மாத்துறாங்க. அதுல ரெண்டு பேருக்கும் ரொம்ப வருத்தம். ஸ்கூல் முடிஞ்சி வீட்டுக்கு வர வழில

ஸாரா: நாளைக்கு என்ன ஸ்கூலுக்கு வந்து விடுவல்ல.
இமான்: ம்ம்
ஸாரா: வரேன்னு சொல்லு.
இமான் : வரேன் வரேன்.

அப்போ ரொம்ப பசங்க ஒரு குன்று மேல பட்டம் விட்டுட்டு இருந்தாங்க. உடனே

ஸாரா : நாமளும் அங்க போகலாமா.
இமான் : ம்ம் போகலாம். நம்ம ரெண்டு பேரும் வீட்டுக்கு போய் bag வைச்சுட்டு நம்ம பட்டம் எடுத்துட்டு வந்துடுலாம்.
ஸாரா: வேண்டாம் , நாம இப்போ சும்மா கொஞ்ச நேரம் பாத்துட்டு போகலாம். இமானும் ஸாராவும் குன்று மேல நோக்கி போனாங்க. கொஞ்ச நேரம் வேடிக்கை பாத்துட்டு வரும்போது ஸாராவோட shoe ரெண்டு கல்லுக்கு நடுல மாட்டிக்கிச்சு. கால எடுக்கும்போது shoe கழண்டு விழுந்துடுச்சு. இமான் எவ்வலவோ try பண்ணியும் அந்த shoeவ எடுக்க முடியல. பாவம் ஸாரா அழ ஆரம்பிச்சுடுச்சு. ரொம்ப நேரம் try பண்ணி முடியாம ரெண்டு பேரும் வீட்டுக்கு நடக்க ஆரம்பிச்சாங்க.


கொஞ்ச தூரம் ஸாரா அழுதுகிட்டே வந்துச்சு.
அப்புறம் இமான் ஸாராவ தூக்கிட்டு நடக்க ஆரம்பிச்சான்.


இமான் : ஸாரா shoe இல்லன்னு அப்பா கிட்ட சொல்லாத. இன்னும் கொஞ்ச நாள்ல நான் உனக்கு வாங்கித்தரேன்.

ஸாரா: உனக்கு எப்படி பணம் கிடைக்கும்.

இமான்: எனக்கு இனி தினமும் மதியம் தான் ஸ்கூல். நான் காலைல எதாவது வேலை பாத்து shoe வாங்கிடலாம்.

ஸாரா: ம்ம்ம்ம்னு சொல்லிடே இமான் தொள்பட்டைல தூங்கிடுச்சு.

ஸாராவ வீட்டுல விட்டுட்டு, கடைத்தெருக்கு நடக்க ஆரம்பிச்சான் அங்க ஒரு கடைல பட்டம் வித்துட்டு இருந்தாங்க. இமானுக்கு நல்லா பட்டம் செய்யவும் விடவும் தெரியும். அவன் அந்த கடைல வேலை கேட்டான். கிடைக்கல. பட்டம் விக்கும் கடையை தேடி வேலை கேட்டான். ஒரு கடைல அவனுக்கு வேலை கிடைச்சது. காலைல மட்டும் தான் வேலை . இமானுக்கு ரொம்ப சந்தோசம்.. வீட்டுக்கு வந்து எப்போதும் போல படிச்சுட்டு தூங்கிட்டான்.

அடுத்த நாள் ஸாராவ தூக்கிட்டு ஸ்கூலுக்கு போனான், ரெண்டு பேரும் எப்போதும் போல ரெண்டு பேரும் கதை பேசிட்டு போனாங்க. ஸாராவ shoe இல்லாம ஸ்கூலுக்குள்ள விடல. இமானுக்கும் shoe இல்லாம அவன் ஸ்கூல்ல விட மாட்டாங்க. அவனுக்கு மதியம் ஒரு மணி வரை வேலை 1.30 க்கு ஸ்கூல். ஸாராவுக்கு ஒரு மணி வரை ஸ்கூல். அறை மணி நேரத்துல இமான் வந்து shoe வாங்கிட்டு அவன் schoolக்கு போகணும்.
ஒன்னும் புரியாம, அவனோட shoeவ ஸாராக்கு போட்டு விட்டான். ஸாராகிட்ட ஒரு இடம் சொல்லி, அங்க ஸ்கூல் முடிஞ்சி வந்திடுன்னு சொல்லிட்டு வேலைக்கு போய்ட்டான். அந்த பெரிய shoeவ தர தரன்னு இழுத்துட்டு ஸாரா நடந்து போச்சு.
இமான் இன்னைக்கு 50 பட்டம் செய்தான். இன்னும் 2 நாள்ல அவனுக்கு shoe வாங்க பணம் கிடைச்சிடும். வேலை முடிஞ்சி ஸாராவ வரச்சொன்ன இடத்துக்கு ஓடினான். ஸாரா பெரிய shoe போட்டு நடக்க முடியாம அத கைல எடுத்துகிட்டு அழதுகிட்டே அந்த இடத்துல நின்னுகிட்டு இருந்துச்சு, இமான் ஸாராவ சமாதனம் செய்ய try பண்ணி , முடியாம ஸாராவ தூக்கிட்டு வீட்டுக்கு நடந்தான். அப்போ

ஸாரா: என்னால முடியல, இன்னைக்கு அப்பாகிட்ட சொல்லிடலாம். காலஎல்லாம் வலிக்குது.

இமான்: வேண்டாம், இன்னும் ஒரு நாள் ,நாம shoe வாங்கிடலாம்.

ஸாரா: இன்னும் ஒரு நாள், ம்ம் சரி.

இமான்: வீட்டுக்கு போய் நீ தூங்கு, நான் ஸ்கூல் போயிட்டு வரேன். அப்பாகிட்ட சொல்லிடாத, சரியா. அப்பாகிட்ட இப்போ பணம் இல்ல, நாமலே இத சரி பண்ணிக்கலாம். சரியா.

ஸாரா: ம்ம்ம்ம்னு சொல்லிட்டே இப்போவும் தூங்கிடுச்சு.

ஸாராவ விட்டுட்டு ஸ்கூலுக்கு போன போது இன்னைக்கு அவனோட ஸ்கூல்ல ஓட்டபந்தயம், அதுக்கு பரிசு ஒரு shoe னு தெரிய வந்தது. இமான் எதுவும் யோசிக்காம அவனோட பேரு கொடுத்தான், வீட்டுக்கு போய்ட்டு ஸாராவ கூட்டிட்டு வந்தான், வரும்போது ,

ஸாரா: எப்போ பந்தயம்

இமான்: நாலு மணிக்கு.

ஸாரா: ஜெய்ச்சிடு.
இமான்: ம்ம்,

இமான் ஓடுறதுக்கு நின்னுட்டு இருந்தான், ஸாரா பந்தயம் முடியுற இடத்துக்கு போய் நின்னுகிச்சு . பந்தயம் தொடங்கினப்போ , எல்லாரும் அவங்க friends பேரச்சொல்லி கத்தினாங்க. ஸாரா மெதுவா இமான் ஜெய்ச்சிடுனு சொல்லிட்டே இருந்துச்சு. ஸாரா சொன்னது தான் நடந்தது. இமான் shoeவ ஸாராவுக்கு போட்டு விட்டான். ரெண்டு பேரும் வீட்டுக்கு எப்போதும் மாதிரி கதை பேசிட்டு போனாங்க. கொஞ்ச நேரத்துல ஸாரா அந்த shoeவ கழட்டி கைல எடுத்துட்டு நடக்க ஆரம்பிச்சது, ஸாரா மனசுல என்ன நினச்சு இருக்கும்னு இத படிக்குற எல்லாத்துக்கும் புரியும்.




இப்படிக்கு

ரமேஷ்.