இமானும் ஸாராவும் அண்ணன் தங்கை. அவர்களின் அப்பா கார்பெட் நெய்யும் தொழில் செய்து வந்தார். ஒரு அறை கொண்ட வீட்டில் அவர் ஒரு பக்கம் கார்பெட் நெய்யும் பட்டறை வைத்து வேலை பார்த்து வந்தார்.
இமான் : ஸாரா shoe இல்லன்னு அப்பா கிட்ட சொல்லாத. இன்னும் கொஞ்ச நாள்ல நான் உனக்கு வாங்கித்தரேன்.
இமான் இன்னைக்கு 50 பட்டம் செய்தான். இன்னும் 2 நாள்ல அவனுக்கு shoe வாங்க பணம் கிடைச்சிடும். வேலை முடிஞ்சி ஸாராவ வரச்சொன்ன இடத்துக்கு ஓடினான். ஸாரா பெரிய shoe போட்டு நடக்க முடியாம அத கைல எடுத்துகிட்டு அழதுகிட்டே அந்த இடத்துல நின்னுகிட்டு இருந்துச்சு, இமான் ஸாராவ சமாதனம் செய்ய try பண்ணி , முடியாம ஸாராவ தூக்கிட்டு வீட்டுக்கு நடந்தான். அப்போ
ஸாரா: என்னால முடியல, இன்னைக்கு அப்பாகிட்ட சொல்லிடலாம். காலஎல்லாம் வலிக்குது.
ஸாராவ விட்டுட்டு ஸ்கூலுக்கு போன போது இன்னைக்கு அவனோட ஸ்கூல்ல ஓட்டபந்தயம், அதுக்கு பரிசு ஒரு shoe னு தெரிய வந்தது. இமான் எதுவும் யோசிக்காம அவனோட பேரு கொடுத்தான், வீட்டுக்கு போய்ட்டு ஸாராவ கூட்டிட்டு வந்தான், வரும்போது ,
இமான் ஓடுறதுக்கு நின்னுட்டு இருந்தான், ஸாரா பந்தயம் முடியுற இடத்துக்கு போய் நின்னுகிச்சு . பந்தயம் தொடங்கினப்போ , எல்லாரும் அவங்க friends பேரச்சொல்லி கத்தினாங்க. ஸாரா மெதுவா இமான் ஜெய்ச்சிடுனு சொல்லிட்டே இருந்துச்சு. ஸாரா சொன்னது தான் நடந்தது. இமான் shoeவ ஸாராவுக்கு போட்டு விட்டான். ரெண்டு பேரும் வீட்டுக்கு எப்போதும் மாதிரி கதை பேசிட்டு போனாங்க. கொஞ்ச நேரத்துல ஸாரா அந்த shoeவ கழட்டி கைல
எடுத்துட்டு நடக்க ஆரம்பிச்சது, ஸாரா மனசுல என்ன நினச்சு இருக்கும்னு இத படிக்குற எல்லாத்துக்கும் புரியும்.இப்படிக்கு