நண்பா
ஞாபகம் இருக்கா உனக்கு? ஸ்கூல் நாட்கள்ள, நாம எப்படி இருந்தோம்னு.
யாராவது ஏன்டா இந்த மொட்டை வெயில்ல ஆடிட்டு இருக்கீங்கனு கேட்டா, டேய் உன் வேலைய பாருடனு சொல்லாம சொல்லிட்டு விளையாடிட்டு இருப்போம்.
திச்சுடரை விரல் தீண்டும் இன்பம் தாராயோனு பாரதி சொன்னார்.
நமக்கு அப்போ அந்த சித்திரை வெயில்ல ஆடுறது தான் jolly இல்ல.
அந்த வெயில் நம்மள ஒன்னும் பண்ணதே இல்லல. அந்த வெயில் நம்மள கருப்பாக்குட ஆக்கினது இல்ல.
பூரா சிசனுக்கு ஒரு விளையாட்டுனு ஆடிட்ட்டு இருந்தோம்.
கோலில ஒருத்தன் , பட்டம் விட ஒருத்தன் , கில்லில ஒருத்தன்னு நமுக்கு போட்டியா எல்லாத்துலையும் நமக்கு ஒரு வில்லன் இருந்தான்ல.
தமிழ் ஸ்கூல் பசங்களுக்கும் இங்கிலீஷ் ஸ்கூல் பசங்களுக்கும் பூட்பால் match அப்போ ,அவனுங்க விளையாடும்போது forword வா , defend பண்ணு என்னமோ சொல்லி நம்மள கடுப்பேத்துவாங்க, இருடி மகனேன்னு பந்தோட சேத்துவச்சு ஒரேயடி , அவன GOUND க்கு வெளில உட்கரவச்சுட்டு , அடுத்து யாருன்னு நாம ரெண்டு பேரும் கண்ணால பேசிப்போம் இல்ல.
நாம வாடகை சைக்கிள்ளே கொரங்குபெடல் கத்துகிட்டப்போ, பொங்கல் சைக்கிள் பந்தயத்துல நாமளும் ஓட்டலாம்னு சைக்கிளுக்கு அலைஞ்சி , கிடைக்காம கடைசில பெரிய பசங்க தம் அடிக்குற பாலகட்டைல உட்கார்ந்து கடுப்புல சைக்கிள் ரேஸ் பாத்தோம். அந்த ரேஸ்ல முதல் வந்தவன் நம்மள கிராஸ் பண்ணும்போது, மகனே அடுத்த பொங்கலுக்கு உன்ன நாங்க அடிப்போம்டனு கட்ட விரல உயர்த்தி challenge பண்ணோம் ஞாபகம் இருக்கா?.
முழுப்பரிட்சை லீவுல , நைட் ரொம்ப நேரம் கிரௌண்ட்ல உட்கார்ந்து வெட்டி கதை பேசிட்டு இருப்போம் , அப்போ ஒரு நாள் நான் ஏதோ புக்குல , அமெரிக்கா நிறைய sattelite வானத்துல நிறுத்தி வைச்சு இருக்கனாம்னு நான் சொல்லிட்டு இருந்தேன்.
நீ : எதுக்குடா
நான் : தெரியல டா , அந்த புக்குல அது பத்தி ஒன்னும் சொல்லல .
நீ : அவன் எதுக்குடா நம்ம நாட்டு மேல நிக்க வைச்சு இருக்கான், அது விழுந்தா நம்ம மேல தான விழும்.
நான்: அப்படியா, actually அது எப்படிடா அங்க நிக்குது.
நீ : flight மாதிரி தான், நிறைய பெட்ரோல் போட்டு இருப்பாங்க.
நான்: flight வெடிக்குமே அது மாதிரி அது வெடிச்சா?
நீ : மேல வெடிச்சா , இந்தியாலையும் வெடிக்கும்.
நான் : அத ஏன்டா நம்ம நாட்டுல நிப்பாட்டி வைச்சு இருக்கான்.
நான் ரொம்ப tensiona ஆகிட்டேன். அன்னைக்கு நீ சொன்ன விஷயம் தான் இப்போ வரை எனக்கு அமெரிக்கா பிடிக்காம வைச்சு இருக்கு. ( இனி இப்படி யாருக்கிட்டையும் பொய் சொல்லாத).
இன்னைக்கு அந்த கிரௌண்ட்ள விளையாட ஆள் இல்லை, இப்போலாம் எல்லா பசங்களும் டிவி முன்னாடி மட்டும் தான் உட்காந்து இருக்காங்க. கண்ணுல சோடா புட்டீயும் , கைல ரிமோட்டும் தான் இப்போ எல்லா பசங்களுக்கும்.இப்போ இருக்க பசங்களோட லீவு எல்லாம் சின்னத்திரையும் வண்ணத்திரையும் எடுத்துகுச்சு.
அதுலயாவது அவனுங்க புத்திய வளத்துக்கிட்டா சரிதான் .
அப்போ நமக்கு சன் ராஜ் விஜய் டிவி இல்ல. நாம தப்பிச்சோம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 கருத்து:
நினைவுகளின் பதிவு..அருமை.
கருத்துரையிடுக