இன்று சீக்கிரம படுக்கைக்கு வன்துட்டேன். ரொம்ப tireda இருக்கு. இன்னைக்கு
காலைல எட்டு மணிக்கு தான் எழுந்தேன். எழுந்த உடனே நேற்றைய இரவு கண்ட கனவு மனசுக்குள் அப்படியே இருந்தது. அந்த கனவு என் பள்ளி காலத்து நண்பனை கொண்டது .என் பள்ளி காலத்து வினோத் . கொஞ்சம் மன வளர்ச்சி குறைந்த பயன். என்னோட நாலாம் கிளாஸ் வரை படிச்சான். நான் இப்போ யோசிக்கும் போது நான் நாலாம் கிளாஸ் படிக்கும் போது அவனுக்கு மூணு இல்ல நாலு வயசு வளர்ச்சி தான் இருக்கும். அவனால தனியா ஸ்கூலுக்கு போக முடியாது. நானும் என் நண்பனும் தினமும் அவன் வீட்டுக்கு போய் அவன கூட்டிட்டு போவோம .அப்போ ஒரு சில நாள் அவன் தனியா எங்கயும் போயிடு வந்தா அத எல்லார்டையும் பெருமையா சொல்லுவோம் . அப்போ நாங்க விளையாடுற எல்லா விளையடுளையும் அவன் இருப்பான். ஆனா அவனுக்கு எங்க விளையாட்டும் புரியாது, வேகமா ஓடவும் முடியாது. அப்போ எங்களுக்கும் அவனுக்கு எந்த விளையாட்டு முடியும்னு தெரியாது.இருந்தாலும் எல்லா விளையடுளையும் அவனை தான் ஜெய்க்க வைப்போம். என்னோட படிச்ச யாரும் அவன அடிக்க திட்ட மாட்டங்க. அவனுக்கும ஒரு மனசு இருந்தது. அவனுக்கும் பிடிச்ச பிடிக்காத விஷயங்கள் இருந்தது. அவனுக்கு இங்கிலீஷ் கிளாஸ் பிடிக்காது . அவனுக்கு பகுத்து பார்க்க முடியாத நிறைய விஷயங்கள் அவன சுத்தி இருந்தது. ஆனா அவனுக்கு சாப்பிட கிடைச்சா அத எல்லாருக்கும் பிரிச்சு கொடக்கனும்னு அவனுக்கு மனசு இருந்துச்சு. அவனோட அம்மா சொல்லி கொடுத்து இருந்தாங்க . அவனுக்கு சரியா எழத படிக்க முடியாது. எல்லா வீட்டு பாடதயும் அவன் அம்மா அவன் கைய பிடிச்சு எழுத வைப்பாங்க. அத கிளாஸ் டீச்சர் சில நேரம் கண்டு பிடிச்சு அவன் அடிப்பாங்க. அவனுக்கு நடந்த விஷயங்கள் எல்லமே அவன் மேல திணிக்க பட்டதாதான் இருந்தது. அவனோட நிலைமைக்கு ஏத்ததா இல்ல. எல்லாருமே அவன் மத்தவங்க மாதிரி சீக்கிரம் ஆகிடனும்னு நினைச்சாங்க. ஆனா அவனோட எல்லை எதுநு மருத்துவ பார்வைல பார்த்தா , அது எதுமே அவன் கைல இல்லைன்னு தெரியும். ஆனா இத யோசிகுற அளவுல அப்போ அவனோட ஸ்கூலும் வீடும் இல்ல.
என்னோட ஆறாம் கிளாஸ்ல நான் டவுன்ல ஒரு ஸ்கூலுக்கு படிக்க போய்ட்டேன். என்னோட மேல் படிப்பு வேலைனு நான் ரொம்ப காலம் வெளியூர், வெளிநாடுநு போயிட்டேன் . உண்மைய சொன்னா நான் எல்லாத்தையும் மறந்துட்டேன். நேற்றைய கனவு தான் இத எல்லாத்தயும் மறுபடி ஒட்டி பாக்க வைச்சது.
நேற்றைய கனவுல , நான் நடந்துட்டு இருந்தேன், அந்த சாலைல எனக்கு பழகின இடங்கள் இருந்தது. ஆனா அந்த சாலைல நான் வெவ்வேறு ஊர்கள்ல பார்த்த இடங்கள் சேர்ந்து ஒரே ரோட்ல இருந்துச்சு.கொஞ்சம் தூரமா நிறைய பசங்க விளையாடிட்டு இருந்தாங்க. நான் அவங்கள கடந்து போயிட்டேன். அப்போ என் மேல் யாரோ கை வைச்சாங்க. நான் திரும்பி பார்க்கவும் அவன் டேய்ய் ரமேஷுசுநு கத்தினான். அவன் ஏன் குழந்தை காலத்து வினோத். ஆனா அவன் இன்னும் குழந்தை பருவத்துல இருந்தான். அவனோட கைய நான் பிடிச்சுகிட்டேன். அவனோட கைகள் ஒரு குழந்தையோட கைகள் மாதிரி இருந்துச்சு. அவனோட கை ரொம்ப வலு இல்லாம இருந்தது எனக்கு தெரிஞ்சது. இருபத்தி இரண்டு வயசான எனக்கு அவன் நிலைமை புரிஞ்சது. அவன் இப்போ தான் கோலி குண்டு விளையாடிட்டு இருக்கான். அவனுக்கு இப்போ தான் அந்த விளையாட்டு புரிஞ்சி இருக்கும் . ஆனா அவனுக்கு என்ன பார்த்த சந்தோசம். எனக்கும் அவன பார்த்த சந்தோசம். ஆனா அவன் நிலமைய பார்த்த எனக்கு மனசு ரொம்ப கஷ்டமா இருந்தது. அவன் என் தொல்பட்டைல கைய வைச்சுகிட்டு குதுச்சுகிட்டே எப்படிடா இருக்க , இப்போ எங்க இருக்க , இப்போ எந்த ஸ்கூல்ல படிக்குறநு கேட்டுட்டே இருந்தான். எனக்கு பேச வாய் வரல. நான் அவன் கைய பிடிச்சுகிட்டேன். நான் நல்லா இருக்கேன் , நீ எப்படி இருக்கு கேட்டேன். அவன் இப்போ எட்டாம் கிளாஸ் படிக்குறான். அவன் என் உயரம் இருந்தான். அதுக்குள்ள அவனோட அம்மா அவன கூப்பிட்டாங்க . உண்மையல அவன் என்கிட்ட பேசுறத பாத்துட்டு அவன் யாரோடும் பேசி சண்ட போட்டுடுவான் பயந்து அவன கூப்பிடாங்க. அது அவங்க முகத்துல தெரிஞ்சது. வினோத் , அவங்க அம்மாகிட்ட , ரமேசுமா ரமேசுமா அப்படின்னு சொன்னான். அவங்க அம்மாக்கு என்ன அடியாளம் தெரியல. அம்மா அடிப்பாங்க நான் போறேன்னு சொல்லிடு ஓடிட்டான்.
அப்போ எனக்கு முழிப்பு வந்த்துருச்சு. உண்மைல வினோத் இப்போ இப்படி தான் இருப்பானா? இப்போ அவன் எங்க இருப்பான்னு சரியா சொல்ல முடியாது. அவங்க அப்பா இப்போ -ரிட்டையர்ட்டு ஆகி இருக்கலாம். அவன் எங்க இருந்தாலும் நல்லா இருக்கனும்
ஒருவேளை அவன் நான் கனவு கண்ட மாதிரி இருந்தானா,
எல்லோர் வாழ்க்கைலயும குழந்தை பருவத்துல தான் சந்தோசமா இருப்பாங்க , ஆனா வினோத்துக்கு அவனோட குழந்தை பருவம் ரொம்ப நாள் கிடைச்சுருக்கும ,நம்ம பார்த்த வலி ,சோகம், சேர்த்த வஞ்சம், கோபம் , நம்ம மனசுல இருக்க அழுக்கு அவன் மனசுல கட்டாயம் இருக்காது இல்ல. நம்ம பார்த்த சந்தோசம் அவன் பார்த்து இருக்கமட்டான்ல. ஆனாலும் நம்மள விட அவன் ரொம்ப சந்தோசமா இருப்பான். இருக்கனும்.
வினோத், எங்க இருந்தாலும் நல்லா இரு. சந்தோசமா இரு. பாதுகாப்பா இரு. இன்னைக்கு கனவுல நீ வந்தா நாம ரொம்ப நேரம் பேசலாம் சரியா.
இப்படிக்கு ,
ரமேஷ்.
2 கருத்துகள்:
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.
நல்ல அரம்பம். தொடரங்கள் உங்கள் பயணத்தை
கருத்துரையிடுக